இலங்கை எரிபொருள் சந்தைக்குள் நுழையவுள்ள  சீனா

சீனாவின் மிகப் பெரிய பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான சினோபெக் எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பதற்கான இலங்கை சந்தையில் நுழைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து அதிகமான நிறுவனங்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையில் மேற்கொள்வதற்கும் அனுமதியளிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த பிரேரணை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

சீனாவின்  சினோபெக் நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் செயற்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடதக்கது