இலங்கை கரையோர மக்களை அவதானமாக இருக்குமாறு முன்னெச்சரிக்கை!

இந்து சமுத்திரத்தின் சுமத்ரா தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் பெங்குலுவுக்கு அருகில் 212 கிமீ தொலைவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் வாழும் மக்களை எதிர்கால அறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது எனவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.