இளம் பெண்கள் வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல அனுமதி.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, இளம் பெண்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்று,  பொருளாதாரத்திற்குத் தேவையான டாலர்களை நாட்டுக்கு பெறுவதற்கான குறைந்தபட்ச வயது எல்லையை 21 ஆகக் குறைத்துள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து நாடுகளுக்கும் குறைந்தபட்ச வயதை 21 ஆக குறைப்பதற்கான தீர்மானத்திற்கு அமைச்சர்கள் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பேச்சாளர் பந்துல குணவர்தன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து பணம் அனுப்பப்படுவது நீண்ட காலமாக நாட்டிற்கான அந்நிய செலாவணியின் முக்கிய ஆதாரமாக உள்ளது, இது வருடத்திற்கு சுமார் 7 பில்லியன் டாலர்களை ஈட்டுகிறது.

இந்த எண்ணிக்கை கொரோனா தொற்று நோயின் போது, 2021 இல் 5.4 பில்லியன் டாலராக குறைந்துள்ளது மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாண்டு 3.5 பில்லியன் டாலருக்கும் கீழ் குறையும் என்று கணிக்கப்பட்டது.

22 மில்லியன் மக்களை கொண்ட நாட்டில, 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளிநாடுகளில், முக்கியமாக மத்திய கிழக்கில் வேலை செய்கிறார்கள்.

மேலும் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகவும் குறைவாக இருப்பதால் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியைக் கூட அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.