இளைஞரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம். ; 5 வயது சிறுவன் பலி.

கதிர்காமம் – தெட்டகமுவ பிரதேசத்தில் நேற்று வாயுத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், பலத்த காயங்களுக்கு உள்ளாகி காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 5 வயது சிறுவன் ஒருவர் இன்று  (17) உயிரிழந்துள்ளார்.

அவர் தெபரவெவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் தெட்டகமுவ பகுதியைச் சேர்ந்த 5 வயதுடைய  நிலேஷ் தேஜஸ் அசித் என்ற குறித்த சிறுவரன் உயிரிழந்துள்ளார்.

அயல்வீட்டு இளைஞரால் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் சிறுவனின் தலையில் காயம் ஏற்பட்டதாக குறித்த சிறுவனின் தந்தை காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞரை விசாரணைகளுக்காக கதிர்காமம் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.