இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் –  ஈரான் மக்கள் வீதியில் இறங்கி கொண்டாட்டம்

இஸ்ரேலிற்கு எதிரான ஈரானின் முன்னொருபோதும் இல்லாத பாரிய  ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானதாக்குதல்களிற்கு ஈரானிய மக்கள் வீதிகளில் இறங்கி ஆதரவை வெளியிட்டு வருகி;ன்றனர்.

ஆண்டவனின் வெற்றி நெருங்கிவிட்டது போன்ற பதாகைகளுடன் வீதிகளில் இறங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவரும் ஈரானிய மக்கள் ஈரான் பாலஸ்தீன கொடிகளுடன் காணப்படுகின்றனர்.

டெஹ்ரானின் பாலஸதீன சதுக்கத்தில் காணப்படும் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேலிற்கு மரணம் அமெரிக்காவிற்கு மரணம் என கோசம் எழுப்புகின்றனர்.

அடுத்த அடி மிகமோசமானதாக காணப்படும் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகையொன்றை டெஹ்ரான் பாலஸ்தீன சதுக்கத்தில் காணமுடிகின்றது.

ஈரான் தலைநகரில் உள்ள பிரிட்டிஸ் தூதரகத்தின் முன்னாலும் அமெரிக்காவின் தாக்குதல் உயிரிழந்த ஈரானின் இராணுவதளபதி காசிம் சுலைமானியின் கல்லறைக்கு முன்னாலும் பெருமளவு மக்கள் திரண்டுள்ளனர்.