இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்: 500 பேர் பலி, 2,000 பேர் காயம்

காஸா எல்லையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய   தரை, வான் மற்றும் கடல் தாக்குதலைத் தொடர்ந்து குறைந்தது    250 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனை அறிக்கைகளின் அடிப்படையில், தாக்குதல்களால் 232 பாலஸ்தீனியர்களும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் 1600 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்த  செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இஸ்ரேல், ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காஸா முழுவதும் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நகர மையங்கள் அல்லது தங்குமிடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேலிய இராணுவம் அறிவுறுத்தியுள்ளது.