ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு

ஈரானின் எட்டாவது ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி, கிழக்கு அஜர்பைஜானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள வர்சகான் பகுதியில் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமான INRA உறுதிப்படுத்தியுள்ளது.

 விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது; விபத்து நடந்த அசர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி ரைசிக்கு மேலதிகமாக அங்கு பயணித்த ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியனும் நேற்று (19) ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அசர்பைஜானில் இருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மற்றும் 9 பேர் பயணித்த ஹெலிகாப்டரே விபத்துக்குள்ளானது.

குறித்த பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.