கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் பெய்த கனமழையால் உருவான நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.
காங்கோ நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள ருவென்சோரி மலைப்பாங்கான பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில், கசேஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மண்ணில் புதையுண்டதில் 15 பேர் உயிரிழந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.