உக்ரைனில் இலங்கை மாணவர்களின் புகைப்படங்கள்  வெளியாகியுள்ளன.

உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் ரஷ்யப் படையினரால் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் 7 இலங்கை மாணவர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

உக்ரைன் ஊடகவியலாளர் Maria Romanenko தனது ட்விட்டர் கணக்கில் இந்த புகைப்படங்களை வெளியிட்டார்.

குறித்த இலங்கை மாணவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.