உக்ரைன் சந்தையில் ரஷ்ய  தாக்குதலில் 2 பேர் பலி – 7 பேர் படுகாயம்.

உக்ரைனின் கிழக்கு நகரமான ஸ்லோவியன்ஸ்கில் உள்ள சந்தையில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

டான்பாஸை முழுவதுமாக கைப்பற்ற முயற்சிக்கும் ரஷ்ய படைகள், லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் எஞ்சியிருக்கும் ஸ்லோவியன்ஸ்க் நகரை குறிவைத்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், சந்தையில் ரஷ்யப் படைகள் ராணுவ பீரங்கிகள் மூலம் நடத்திய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் 7 பேர் படுகாயமடைந்ததாகவும் ஸ்லோவியன்ஸ்க் நகர மேயர் வாடிம் லியாக் தெரிவித்துள்ளார்.