உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 13 தமிழ் அரசியல் கைதிகள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 தமிழ் அரசியல் கைதிகள், தம்மை விடுவிக்கக் கோரி உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இவர்கள் 13 பேரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நாடாளுமன்றில் நேற்றைய தினம் தெரிவித்தார்.

இலங்கை படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்காமல், தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்வதாக கூறப்பட்டு அண்மைக்காலங்களில் கைது செய்யப்பட்டவர்களே விடுவிக்கப்படுகின்றனர்.

எனினும் சர்வதேசத்துக்கு காட்டும் வகையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதாக அரசாங்கம், பொய் கூறி வருகிறது. என்றும்  செல்வராசா கஜேந்திரன்    நாடாளுமன்றில் தெரிவித்தார்.