உண்டியல் முறையின் கீழ் பெருந்தொகை பணத்தை பரிமாற்றிய நபர் கைது

உண்டியல் முறையின் கீழ் பெருந்தொகை பணத்தை பரிமாற்றிய நபர் கைது

 
வெலிகம பிரதேசத்தில் உண்டியல் முறையின் கீழ் வெளிநாட்டுப் பணத்தைப் பரிமாற்றிக் கொண்டிருந்த நபரொருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

வெலிகம, கல்பொக்க பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் சிக்கியுள்ளார்.

சட்டவிரோதமான உண்டியல் முறையின் கீழ் வெளிநாட்டுப் பணத்தை மாற்றியமைக்காக கல்பொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பணத்தின் மொத்தப் பெறுமதி ஒரு கோடியே 67 லட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க டொலர், யூரோ, பிரித்தானிய பவுண்ட், திர்ஹாம் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்கள் அந்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.