உயர் பதவியில் உள்ள அதிகாரிக்கு மரண தண்டனை விதித்த வடகொரிய ஜனாதிபதி

வடகொரியாவில் ஜனாதிபதியை பற்றி இணையதளத்தில் தேடியதற்காக உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவில் வெளியுலகம் பற்றி பொதுமக்கள் தெரிந்துக்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அதுபோன்று அந்த நாடு தொடர்பான எந்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவது இல்லை.

குறிப்பாக அங்கு பொதுமக்கள் இணையத்தை பயன்படுத்த அனுமதி கிடையாது.

அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகளுக்கு மட்டுமே இணையத்தை பயன்படுத்த அனுமதி உள்ளது. அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

அதாவது அவர்கள் இணையத்தில் என்ன தேடுகிறார்கள் என்பதை கண்காணிக்க தனியே ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு அவ்வப்போது அரசுக்கு அறிக்கை அனுப்பும்.

அந்த வகையில் அண்மையில் ஜனாதிபதி அளிக்கப்பட்ட அறிக்கையில் அவரை பற்றிய தகவல்களை `பியூரோ 10′ என அழைக்கப்படும் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் இணையத்தில் தேடியதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் கடும் கோபம் அடைந்த ஜனாதிபதி கிம் ஜாங் உன், அவருக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

நாட்டின் உயர் பதவியில் உள்ள உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கே மரண தண்டனை வழங்கி இருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.