உயிரிழந்த நிலையில் ஆண் சிறுத்தை மீட்பு

இராகலை – ஹைஃபொரஸ்ட் – காவத்தை தோட்டத்தில் நேற்று உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.

சிறுத்தையை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஹைஃபொரஸ்ட் காவத்தை தோட்டத்தில் விவசாய காணி ஒன்றின் அருகில் உள்ள தேயிலை மலையையொட்டிய காட்டுக்குள், கம்பியொன்றில் கழுத்து இறுகிய நிலையில் குறித்த சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

விவசாய காணிக்கு சென்ற விவசாயி ஒருவர் சிறுத்தையின் சடலத்தை கண்டு காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.

உயிரிழந்த சிறுத்தை ஆறு அடி நீளமும், 150 கிலோ எடையும் கொண்ட ஆண் சிறுத்தை என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.