எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஏகமனதாக தெரிவு

இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில்  ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று (08) நடைபெற்றுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கும் தீர்மானத்தை ராகுல் காந்தி விரைவில் எடுப்பார் என கே.சி.வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்.

INDIA கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் இணைந்து ஒற்றுமையாக செயலாற்ற எதிர்பார்ப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார்.