மடிவெல சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சொகுசு ஜீப் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொகுசு ஜீப் மோதியதில் முச்சக்கர வண்டி ஒன்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளன.
விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.