எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மோதல். – மூவர் மீது கத்திக்குத்து.

திஸ்ஸமஹாராம, ஜுல்பல்லம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு நாட்களாக பெற்றோல் கிடைக்காமல் வரிசையில் நின்றவர்கள் ஒரு வரிசை நிற்கையில், பெற்றோல் நிரப்பும் நிலையத்திற்கு பெற்றோல் வந்தவுடன் பெற்றோல் எடுக்க மற்றொரு புதிய வரிசையை துவக்கிய போது பழைய வரிசை புதிய வரிசைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது.

இதன்போதே கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.