எரிபொருள் பதுக்கல் தொடர்பில் தகவல் வழங்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்

எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள், சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் அல்லது எரிபொருள் விநியோகம் குறித்த வழிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, இவ்வாறான மோசடிகள் தொடர்பில் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை வாட்ஸ்அப் இலக்கமான 0742123123 க்கு அனுப்புமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.