எரிபொருள் வரிசையில் விளையாட்டு கார்.

திருகோணமலை லிங்கநகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருந்த வாகனங்களின் வரிசையில் விளையாட்டு கார் ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மிகச்சிறிய விளையாட்டு கார் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.

வரிசையில் நின்ற ஏனைய வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கையில், நபர் ஒருவர் தனது காரை வரிசைக்கு கொண்டு வரும் வரை, பொம்மை காரை நிறுத்தி இடம்பிடித்துள்ளார் என்றனர்.