எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்.

கனிய எண்ணெய் உற்பத்தி, எரிபொருள் விநியோகம் என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய சகல சேவைகள் மற்றும் சுகாதார சேவை என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.