எலான் மஸ்க்கின் முன்னாள் மனைவிக்கு வயது குறைந்த நடிகருடன் நிச்சயதார்த்தம்.

உலகின் முன்னணி செல்வந்தர்களுள் ஒருவராக திகழ்பவர்  எலான்  மஸ்க்.

இவர், அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையை கையகப்படுத்தினார்.

இதையடுத்து, ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை அவர் கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில்,  எலான்  மஸ்கின் முன்னாள் மனைவி தலுலா ரிலேவுக்கு பிரபல நடிகர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலுலா ரிலே தன்னைவிட 4 வயது இளையவரான ‘கேம் ஆப் திரோன்ஸ்’ புகழ் தோமஸ் பிராடி சாங்ஸ்டரை (thomas brodie-sangster) மணக்கவுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக தலுலா ரிலே, தோமஸ் பிராடியை காதலித்து வருகின்றார்.

ரிலே தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தனது முன்னாள் மனைவி மற்றொரு திருமணத்திற்கு தயாராகி வருவதை அறிந்த ஈலோன் மஸ்க், சிவப்பு இதயம் கொண்ட எமோஜியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தோமஸ் பிராடி சாங்ஸ்டரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது நிச்சயதார்த்தம் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.