எல்லா திசையும் வானம் அழகானது

நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்
இங்கு எல்லோரும் அன்பானவர்கள்
எல்லோருக்கும் கருணை உள்ளது .

ஏதோ ஒரு காலத்தில் உங்கள் மீது பிரியம் வைத்திருக்க கூடும்

பிரியமாக பேசியிருக்க கூடும்
உரிமையாய் சண்டை போட்டிருக்க கூடும்
அன்பின் இருக்கத்தில் முத்தங்களை கூட பரிமாரியிருக்க கூடும்

ஆனால் ஒன்றை மட்டும் மறவாதீர்கள்
அன்பை பாரபட்சம் இன்றி எல்லோர் மீதும் பொழிபவர்களும் இருக்கிறார்கள்

அவர்கள் மிகவும் அழகானவர்கள்
இந்த பிரபஞ்சத்தில் எஞ்சிய தேவதைகள்
அவர்களிடம் அளவற்ற அன்பும், காதலும் உள்ளது.

நீங்கள் சுயநலம் மிக்கவராக இருக்கலாம்
உங்கள் காதல் சிறுபுத்தி உடையதாக இருக்கலாம்
உங்களை நேசிப்பர்களின் சிறகை உடைப்பவராக இருக்கலாம்

உங்கள் காதல் எவ்வளவு வன்முறையானது…!
 
எல்லையற்ற அவர்களின் வானில்
நீங்கள் கொடுத்த வெறுமை மட்டுமே இருக்கவேண்டும் என நினைப்பது
எவ்வளவு கொடுமை

உங்கள் காதல் கடிவாளம் இறுகும்போது
அவர்கள் வேறு ஒரு திசையை நோக்க கூடும்.

அங்கு வெறுமையற்ற
அழகான வானம் தோன்றும்.

  • வேலு சீலன்