எல்லை தாண்டி மீன் பிடித்த 8 இந்திய மீனவர்கள் கைது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பில் வைத்து இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

அவர்கள் பயணித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த 8 இந்திய மீனவர்களும் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.