ஏஞ்சலோ மெத்யூஸுக்கு கொவிட்-19 தொற்று உறுதி.

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

கொவிட் அறிகுறிகள் தென்பட்டமையினால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

தற்போது காலியில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய ; இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் ஏஞ்சலோ மெத்யூஸ் விளையாடி வந்திருந்தார்.

நேற்று முன்தினம் இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடியபோது, ஏஞ்சலோ மெத்யூஸும் அணியில் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில், தற்போது அவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதன் காரணமாக, அவருக்கு பதிலாக ஓஷத பெர்னாண்டோ அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.