ஏமன் நாட்டில் ராணுவ ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
அப்யன் மாகாணத்தில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்கள் வெடித்துச் சிதறி, அந்த தாக்கத்தால் பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்தன.
இதில் படுகாயம் அடைந்த 60 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடி விபத்து தற்செயலாக ஏற்பட்டதா அல்லது திட்டமிட்ட சதியா என ராணுவ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.