ஐஸ் போதைப் பொருளால் பிள்ளைகளின் மூளை செயலிழக்கும்.

ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்தும் பிள்ளைகளின் மனநிலை முற்றாக பாதிக்கப்பட்டு திரிபடைந்து போகும் என கொழும்பு சீமாட்டி றிஜ்வே மருத்துவமனையின் சிறுவர் நோய்கள் தொடர்பான சிறப்பு மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு உணவை சாப்பிடுவதற்கான பசி உணர்வு படிப்படியாக குறைந்து போகும். இதன் காரணமாக உடல் பலவீமனடைந்து, நோய்களுக்கு உள்ளாவது நிச்சயமான பொதுவான தன்மை.

இதன் காரணமாக பிள்ளைகளின் உடல் மற்றும் உள ரீதியான பலம் குறைந்து, கல்வி கற்றல் முற்றாக பாதிக்கப்படும். பிள்ளைகள் வெளியில் என்ன செய்கின்றனர் என்பது குறித்து பெற்றோர் விழிப்பாக இருக்க வேண்டியது முக்கியம்.

ஏனைய போதைப் பொருட்களுடன் ஒப்பிடும் போது ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகம். ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்துபவர்களின் ஆயுள் காலம் மிகவும் குறுகியது.

நித்திரை மயக்கம் குறைந்து, ஞாபக சக்தி அதிகரிக்கும் என்ற பொய்யை பரப்பியே பல போதைப் பொருள் வியாபாரிகள் பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருளை விற்பனை செய்து வருகின்றனர்.

அது முற்றும் முழுதான பொய். ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்துவதால், ஞாபக சக்தி குறையும் என்பதுடன் மூளை படிப்படியாக செயலிழந்து போகும் எனவும் மருத்துவர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.