ஒடிசாவில் சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 1வது இஸ்லாமிய பெண்

இந்திய மக்களவைத் தேர்தலில் சோபியா ஃபிர்தௌஸ் என்ற இளம் பெண் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் பாராபதி – கட்டாக் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட குறித்த பெண் பாரதீய ஜனதா கட்சியின் பூர்ண சந்திர மகாபத்ராவை 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஒடிசாவில் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது இஸ்லாமியப் பெண் என்ற பெருமையை சோபியா ஃபிர்தௌஸ் பெற்றுள்ளார்.