ஒடிசாவில் வெப்ப அலை ; 8 பேர் உயிரிழப்பு!

ஒடிசாவில் வெப்ப அலை காரணமாக கடந்த 3 நாட்களில் 8 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவிலும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கத்துக்கு மாறான அதிக வெப்பத்தை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

மனிதனால் உந்தப்பட்ட பருவநிலை மாற்றமே இதற்கு காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும் நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் வரும் நாட்களில் தொடர்ந்து அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தலைநகர் டெல்லியின் சில இடங்களில் இம்மாதம் அதிகபட்ச வெப்பநிலை 49.9 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.