ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 280ஐ தாண்டியது

கொல்கத்தா: ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.  கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.