ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் புதையல் தோண்டிய மூவர் கைது.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட சம்மளங்குளம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் நேற்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஒட்டுசுட்டான் சிவநகர் பகுதியினை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பொலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.