ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாதிரி மாறும் பீரியட்ஸ்… ஸ்ட்ரெஸ்தான் காரணமா?

பீரியட்ஸ் சுழற்சியைக் கணிக்க இன்று நிறைய ஆப்கள் வந்துவிட்டன. எந்தத் தேதியில் உங்களுக்கு பீரியட்ஸ் வந்தது, அடுத்த பீரியட்ஸ் எப்போது வரலாம், கருத்தரிக்கும் வாய்ப்புள்ள நாள், எத்தனை நாள்கள் பீரியட்ஸ் நீடிக்கிறது என எல்லாவற்றையும் அதில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் சுழற்சி ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. சிலமுறை ப்ளீடிங் குறைவாக, 3 நாள்களோடு முடிந்துவிடுகிறது. சிலமுறை ஒரு வாரம் நீடிக்கிறது. எனக்கு ஸ்ட்ரெஸ்ஸும் அதிகம். அதுவும் இந்தப் பிரச்னைக்கு காரணமாக இருக்குமா?

ஒரு பெண் இப்போதுதான் பூப்பெய்தியிருக்கிறார்…. 13-14 வயதிருக்கும் என்ற நிலையில் அவருக்கு ரத்தப்போக்கு குறைவாக இருக்கலாம். அதுவே போகப்போக ப்ளீடிங்கின் அளவு அதிகரிக்கும். 7-8 நாள்கள்வரை நீடிக்கும் ரத்தப்போக்கை நார்மல் என்றே சொல்வோம்.

அதுவே 40 வயதைக் கடந்த பிறகு ப்ளீடிங்கின் அளவு குறையத் தொடங்கும். அதாவது 7-8 நாள்கள் வரை நீடித்த பீரியட்ஸ் சுழற்சியானது 3-4 நாள்களுக்கு மட்டுமே இருக்கும். இதுவும் நார்மலானதே.

அதாவது வயதாக, ஆக பீரியட்ஸ் சுழற்சி நீடிக்கும் நாள்கள் குறையும். சினைப்பையின் செயல்திறன் படிப்படியாகக் குறைவதே இதற்கு காரணம். மெனோபாஸை எட்டும்வரை இப்படி படிப்படியாகக் குறைந்து வந்து, ஒருகட்டத்தில் மாதவிடாய் முழுமையாக நின்றுவிடும்.