கச்சத்தீவை மீட்க தொடர்ந்தும் வலியுறுத்தப்படும்.

கச்சத்தீவை மீட்குமாறு , இந்திய மத்திய அரசாங்கத்திடம் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருவதாக பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

என் மண், என் மக்கள் என்ற தொனிப்பொருளில் பாதயாத்திரையை மேற்கொண்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2004 முதல் 2014ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், 85 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும், தற்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் அவ்வாறான எந்தவொரு பாதகமான செயற்பாடும் இடம்பெறவில்லை.

இந்தநிலையில், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீளப்பெறுவதற்கு இந்திய மத்திய அரசாங்கத்திடம் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருவதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.