கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மண்ணெண்ணை பிரச்சினைக்கு இந்த வார இறுதியில் தீர்வு.

கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மண்ணெண்ணை பிரச்சினைக்கு இந்த வார இறுதியில் இருந்து தீர்வு கிடைக்கும். என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஏற்கனவே பல்வேறு பாதிப்புக்களையும், பொருளாதாரத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், கடல்சார் உணவினை பெற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு விலை அதிகரித்து காணப்படுவது தொடர்பில் அமைச்சரிடம் வினவப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர்,

இந்த பிரச்சினை இருப்பது உண்மைதான். இந்த நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதனால் எமது மக்கள் அதிகளவான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதற்கு தீர்வு காணும் வகையில் எரிபொருளை தாராளமாக கிடைக்கக்கூடிய ஏற்பாடுகளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக கடற்தொழிலாளர்களை பொறுத்தவரையில், சிறு கடற்தொழிலாளர்களிற்கு மண்ணெண்ணை ஒரு தட்டுப்பாடாக இருக்கின்றது. சற்று முன்பும் கொழும்புடன் தொட்புகொண்டு தனியாரால் மண்ணெண்ணை இறக்கப்படுவது தொடர்பில் தற்போது உள்ள நிலை தொடர்பில் கலந்துரையாடியுள்ளேன்.

அதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபனமும் மசகு எண்ணையை வடித்து மண்ணெண்ணையாக விநியோகிப்பதற்கான நடவடிக்கையும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்த வார இறுதியில் கைகூடும் என்று நம்புகின்றேன்.

மத்திய அரசின் அமைச்சராக இருந்தாலும், நன்நீர் மீன் பிடியை அதகரிப்பதற்கான முயற்சி மத்திய அரசினால் முன்னெடுக்கப்படுகின்றதா? என  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்  வினவியபோது,

நாடு தழுவிய ரீதியில் அந்த திட்டத்தை நாங்கள் கொண்டு வருகின்றோம். கிளிநொச்சி மாவட்டத்தில் முறிப்பு எனும் இடத்தில் 30 சிறு குளங்கள் உள்ளது. அதில் 5 குளங்களை புதுப்பித்திருக்கின்றோம்.

குறித்த இடத்தினை நாளை பார்க்க சென்று, அதனை எவ்வளவு விரைவில் இயக்க முடியும் என முயற்சிக்கின்றோம். அதேவேளை, ஏனைய குளங்கள், வாவிகள் என எல்லாவற்றிலும் நாங்கள் மீன்குஞ்சுகளையும், இறால் குஞ்சுகளையும் விடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். என அவர் தெரிவித்தார்.

இந்திய சுதந்திர தின நிகழ்வில் கச்சை தீவை மீட்போம் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது . இது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வினவியபோது,

கச்சைதீவு இலங்கைக்குரியது. அதே நேரத்தில், இந்திய படகுகள் எல்லை தாண்டி அத்துமீறி வந்து கடல் வழங்களை அழிப்பதிலும் எனக்கு இணக்கப்பாடு இல்லை என அவர் தெரிவித்தார்.

தேசிய தினத்தில்  தமிழிலும் தேசிய கீதம் எலிக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. அதனை தொடர்ந்து பரவலாக இலங்கையில் பல இன, மத, மொழி உள்ள மக்கள் வாழ்வதனால், பன்மைத்தன்மையை வெளிப்படுத்தும் வகையிலான கோரிக்கையைதான் அமைச்சரவையில் நான் முன் வைத்துள்ளேன். அதற்கு அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

சீனக்கப்பல் தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிடுகையில்,

அரசுகளுக்கிடையிலான கலந்துரையாடல் என்று போய்க்கொண்டிருக்கின்றது. சீனக்கப்பல் இங்கு வருவதனால் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் எழக்கூடிய பிரச்சினை என்னவென்று ஜனாதிபதி கேட்டுள்ளார்.

இதுவரை அவர்கள் சரியான கருத்து எதையும் சொல்லவில்லை என்று ஊடகங்கள் சொல்லுகின்றது. எது எவ்வாறானாலும், சுமுகமான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு என அவர் இதன்போது தெரிவித்தார்.