கடலில் மூழ்கிய உலக புகழ்பெற்ற மிதக்கும் உணவகம்.

உலக புகழ்பெற்ற ஹொங்கொங் சுற்றுலாத்தலமாக விளங்கிய ‘ஜம்போ’ மிதக்கும் உணவகம், தென் சீனக் கடலில் மூழ்கியதாக அதன் தாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாராசெல் தீவுகளுக்கு அருகில் ‘ஜம்போ’ மிதக்கும் உணவகம், ஞாயிற்றுக்கிழமை பாதகமான நிலைமைகளை எதிர்கொண்ட பிறகு மூழ்கியதாக அபெர்டீன் ரெஸ்டாரன்ட் எண்டர்பிரைசஸ் ஒரு அறிக்கையில் அறிவித்தது.

படகு 1,000 மீட்டருக்கும் (3,280 அடி) அடியில் மூழ்கியதால் மீட்புப் பணி மிகவும் கடினமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேட்டர் மெல்கோ இன்டர்நேஷனல் டெவலப்மென்ட், கடந்த மாதம் வணிகம் 2013ஆம் ஆண்டு முதல் லாபகரமாக இல்லை என்றும், ஒட்டுமொத்த இழப்புகள் 100 மில்லியன் ஹொங்கொங் டொலர்களை (12.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) தாண்டிவிட்டதாகவும் கூறியது.

1976ஆம் ஆண்டு மறைந்த கேசினோ அதிபர் ஸ்டான்லி ஹோவால் ‘ஜம்போ’ மிதக்கும் உணவகம், திறக்கப்பட்டது.

சீன ஏகாதிபத்திய அரண்மனை போல வடிவமைக்கப்பட்டு, ஒரு காலத்தில் பார்க்க வேண்டிய அடையாளமாக கருதப்பட்ட இந்த உணவகம், ராணி எலிசபெத் முதல் டாம் குரூஸ் வரை பார்வையாளர்களை ஈர்த்தது.