கடுமையான முடிவுகளில் ஜனாதிபதி ரணில்.

ஜனாதிபதி கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் நாடு பொருளாதார படுகுழிக்குள் விழும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.  

ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தினால் இலங்கை மீண்டும் முன்னைய நிலைக்கு செல்வதற்கு ஐந்து வருடங்களாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார மீட்சிக்கு வலியுடனான சிகிச்சை அவசியம் என தெரிவித்துள்ள அவர் பேரழிவு நிலையை தவிர்ப்பதற்கு ஜனாதிபதி அனைத்து கடினமான தீர்மானங்களையும் எடுப்பார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 ஜனாதிபதி விக்ரமசிங்க பொருளாதார ரீதியிலான அறிவு மிக்கவர் என்னசெய்யவேண்டும் என்பது அவருக்கு தெரியும், அரசியல் இயக்கவியல் நாட்டை தற்போதைய நிலைக்கு தள்ளியுள்ள மக்களை கவர்வதற்கான ஜனரஞ்சக நச்சு அரசியல் , ஆகியவற்றின் காரணமாக ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஏனைய அரசியல்வாதிகளிற்கும் அவற்றை செய்ய முடியாமல் போயுள்ளது.

ஆனால் ஜனாதிபதி அதனை புரிந்துகொண்டால் அவரால் அதனை நிறைவேற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கடினமானதை செய்ய தயாராகியுள்ளார் போல தோன்றுகின்றது. அவர் அதனை செய்யாவிட்டால் இலங்கை படுகுழிக்குள் சிக்குப்படும் அது பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் நாங்கள் சர்வதேச நாணயநிதியத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடவேண்டும்,எங்களிடம் அந்நிய செலாவணியோ அல்லது ரூபாய்களோ இல்லை அரசாங்கத்திடம் நிதி வருமானம் இல்லை.

இதன் காரணமாக பணத்தை அச்சிடவேண்டிய கடும் அழுத்தம் மத்திய வங்கிக்கு ஏற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை உடனடியாக செய்யவேண்டும் ஒரேவழி சர்வதேச நாணயநிதிய திட்டமே அது எங்களிற்கு நற்சாட்சி பத்திரத்தை தரும்,உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றிடமிருந்து நிதி உதவியை கொண்டுவரும்,பொருளாதாரத்தில் தனியார் முதலீடுகள் கிடைப்பதற்கும் அது வழிவகுக்கும் கடன் கொடுப்பனவாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் மூலம் நாங்கள் எங்கள் கடன் மறுசீரமைப்பு முன்னெடுக்க வேண்டும் எனவும் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.