கடும் வறட்சியான காலநிலைக்கு பின் வவுனியாவில் மழை.

வவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் நிலவிய நீண்ட வறட்சியின் பின்னர் இன்று (15.08) பிற்பகல் 3.30 மணி தொடக்கம் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவிய வேளையில் மழை பொழிந்தமையினால் விவசாயிகளும், பொதுமக்களும் மனமகிழ் அடைந்துள்ளனர்.