கட்டாரில் 557 இலங்கையர்கள் பலி.

கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கேற்ற சுமார் 557 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மைதான கட்டுமானம், வீதி அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் வேலை செய்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6,500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கத்தாரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை வென்றதிலிருந்து இறந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.