கட்டுநாயக்க விமான நிலையத்தில் இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா உட்பட அவரது இசைக்குழுவினர் சென்னையில் இருந்து கொழும்பு வழியாக அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

Ilayaraaja Bandaranaike International Airport

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய இசைஞானி இளையராஜா உட்பட இசைக்குழுவினருக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊழியர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கியதாக விமான சேவை நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Ilayaraaja Bandaranaike International Airport

அவுஸ்திரேலியா சிட்னி மற்றும் மெல்பேர்ன்  நகரில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ, பாடகர் எஸ்.பி.பி.சரண், பாடகி சுவேதா மோகன், பாடகர் மது பாலகிருஷ்ணன் உட்பட பல இசை கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Ilayaraaja Bandaranaike International Airport