கனடாவின் மார்க்கம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் படுகாயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்க்கம் சாலை மற்றும் எல்சன் தெரு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று பேர் பயணித்த காருடன் ட்ரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரின் சாரதியான 21 வயது இளைஞனும், பின் இருக்கையில் பயணித்த 23 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
52 வயது பெண் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
டிரக்கின் சாரதி, 46 வயதுடைய நபர், சம்பவ இடத்தில் இருந்துள்ளார், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்கு என்ன காரணம் என்று தெரிவிக்கவில்லை.
மேலும் விபத்து தொடர்பாக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.