கனடாவில் கத்திக்குத்து. ; 10 பேர் பலி.

கனடாவின்  மத்திய சஸ்கட்ச்வான் மாகாணத்தில் இடம்பெற்ற கத்தி குத்துச் சம்பவத்தில் பத்து பேர் கொல்லப்பட்டதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பழங்குடியின மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

13 வெவ்வேறு இடங்களில் தாக்குதல் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

31 வயதான டேமியன் சன்டர்சன் மற்றும் 30 வயதான மைல்ஸ் சன்டர்சன் ஆகியோரே இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Damien Sanderson and Myles Sanderson

இந்த இருவரையும் உடனடியாக பொலிஸாரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த இருவரும் ஆயுதம் தாங்கியுள்ளதாகவும் இவர்கள் ஆபத்தானவர்கள் எனவும் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.