கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண், கவுன்சிலராக முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் பிராம்டன் நகரை சேர்ந்தவர் நவ்ஜித் கவுர் பிரார் என்பவரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியரான இவர் சுகாதார பணியாளராக வேலை செய்து வருகின்றார்.
இந்நிலையில் அங்கு நடந்த நகர வார்டு கவுன்சிலர் தேர்தலில் நவ்ஜித் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் 2 மற்றும் 6 வது வார்டில் கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் எம்பி ஜெர்மைனி சேம்பர்ஸ்சை தோற்கடித்து நவ்ஜித் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் 28.85 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
பிராம்டன் நகர தேர்தலில் 40 சீக்கியர்கள் போட்டியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.