கனடாவில் குரங்கம்மை தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 680-ஐ கடந்துள்ளது.
இது குறித்து கனடா பொது சுகாதார நிறுவனம் (PHAC) நாட்டில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 681 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி கியூபெக்கில் மாகாணத்தில் 331 பேருக்கும், ஒன்ராறியோவில் மாகாணத்தில் 288 பேருக்கும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 48 பேருக்கும், ஆல்பர்ட்டாவில் 12 பேருக்கும் மற்றும் சஸ்காட்செவானில் இருந்து இரண்டு பேருக்கும் குரங்கம்மை தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 18 வரை, கனடாவில் குரங்கம்மை தோற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாகாணமான கியூபெக், அதிக ஆபத்துள்ள நபர்களுக்கு 12,553 டோஸ் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
பெரும்பாலான கியூபெக் பிராந்தியங்கள் ஆபத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வருகின்றன.