கனடாவில் பால்மா விலையை அதிகரிப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு லீற்றர் பாலின் விலையை இரண்டு சதங்களினால் உயர்த்துவதற்கு கனேடிய பால்பொருள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்வரும் புரட்டாதி மாதம் முதல் பண்ணைப் பாலின் விலை ஒரு லீற்றருக்கு 2 சதங்கள் அல்லது 2.5 வீதமாக உயர்த்தப்பட உள்ளது.
கடந்த மாசி மாதம் பாலின் விலை லீற்றருக்கு 6 சதங்களினால் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் பால் மாவின் விலை வருடாந்தம் ஒரு தடவை மீளாய்வு செய்யப்படும் நிலையில் இம்முறை இரண்டு தடவைகள் விலை அதிகரிப்பு பதிவாகின்றது.
நாட்டில் நிலவி வரும் பணவீக்கம் காரணமாக இவ்வாறு பாலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பால் உற்பத்தி செய்வதற்கான பொருட்கள் என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2021 ஆவணி மாதம் முதல் இதுவரையில் தீவண வகைகள் 22 வீதமும், சக்தி வளம் 55 வீதமும், உரம் 35 வீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.