கனடா அமெரிக்க எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்.

Roxham-road-death

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் அவரது மனைவி வைஷாலி (33), தம்பதியரின் பிள்ளைகளான விஹாங்கி (12) மற்றும் தார்மிக் (3) ஆகியோர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுபோல 2022இல், 45,250 புகலிடக்கோரிக்கையாளர்கள் கனடாவிலுள்ள கியூபெக்குக்குள் நுழைந்துள்ளார்கள்.  

அவர்களில் பலர்,  ரோக்ஸ்ஹாம் வீதி என்ற இடம் வழியாக அமெரிக்காவிலிருந்து கனடாவின் கியூபெக் மாகாணத்துக்குள் நுழைந்துள்ளார்கள்.

தற்போது அதேபோல அதே  ரோக்ஸ்ஹாம் வீதி  என்ற இடம் வழியாக அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்ந்தோர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன் தினம் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் எந்த நாட்டவர், எப்படி உயிரிழந்தார் என்பது போன்ற விடயங்கள் தெரிய வரவில்லை.

பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

Roxham-road-death
Roxham-road-death
Roxham-road-death