கனடா முழுவதும் இணைய சேவை பாதிப்பு.

கனடா முழுவதும் இணைய சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், வங்கி சேவை, போக்குவரத்து முதலான முக்கிய சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

கனடாவில் இணைய சேவை வழங்கும் பிரம்மாண்ட நிறுவனங்களில் ஒன்றான (Rogers Communications) ரோஜர்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தில் நேற்றைய முன் தினம் இணைய சேவை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வங்கி சேவைகள், பாஸ்போர்ட் அலுவலக சேவைகள், எல்லை பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தும்ஆப், ஆகியவைகூட பாதிகப்பட்டன.

அவசர உதவியை அழைக்கும் 911 சேவை கூட நாடு முழுவதும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இணைய சேவை பிரச்சினைக்கு சைபர் தாக்குதல் காரணம் அல்ல என பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் (Marco Mendicino) மார்கோ மெண்டிசினோ தெரிவித்துள்ளார்.