கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு. ; ஒருவர் பலி.

கம்பஹா, படபொத, குருச சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கட்டிட பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.