கம்பஹா கெஹல்பத்தரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிகை திருத்தும் நிலையம் ஒன்றிற்கு அருகில் உந்துருளியில் வந்த ஒருவரால் சுடப்பட்ட அவர், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மே மாதம் 30 ஆம் திகதி முதல் நாட்டில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட 30 துப்பாக்கி தாக்குதல்களில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.