கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி.

கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ மேஜர் உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் பயணித்த வாகனம் சுவரில் மோதியதில் மூவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கமுவ, இஹலகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்த இராணுவ மேஜர் 35 வயதுடைய இராணுவ வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.