கல்குவாரி இடிந்து விழுந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் பலி.

மிசோரம் ஹனாதியால் மாவட்டத்தில் மவுதாரில் தனியார் கல்குவாரி இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் 8 பேர், நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டனர்.

மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ள 4 பேரின் உடல்களை தேடும் பணியில், தேசிய மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் மதிய உணவு இடைவேளை முடிந்து, மீண்டும் பணிக்கு திரும்பிய போது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.