காங்கேசன்துறையில் வயோதிபப் பெண் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு

காங்கேசன்துறை கொல்லங்கலட்டி பிரதேசத்தில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி பகுதியைச் சேர்ந்த சாணை தவமணி (78) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

பெண்ணின் வீட்டு வளாகத்தில் உள்ள தோட்டத்துக்கு இன்று (24) காலை தண்ணீர் இறைப்பதற்கு சென்ற உறவினர் ஒருவர், குறித்த வயோதிபப் பெண், இரத்தக் காயங்களுடன் இருப்பதைக் கண்டு காங்கேசன்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அப்பெண் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்படாமல் அவ்வாறே காணப்படுவதாகவும், மரணத்துக்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காங்கேசன்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.